தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து + "||" + IAF Mig-29 crashes in Punjab's Nawanshahr, pilot ejects safely

பஞ்சாப்பில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து

பஞ்சாப்பில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து
பஞ்சாபில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
நவன்ஷார்,

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே விழுந்து நொறுங்கியது. விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தார்

ஜலந்தர் அருகே உள்ள பயிற்சி மையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 29 ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாகவும், விமானம் தரையில் விழுவதற்கு முன்பு, விமானி அதில் இருந்து குதித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  

காலை 10.40 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் கார்க் தெரிவித்தார். மேலும், விமானி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.