சென்னையில் இருந்து கேரளா வந்தவருக்கு கொரோனா தொற்று- கேரள முதல்வர் பினராயி விஜயன்


சென்னையில் இருந்து கேரளா வந்தவருக்கு கொரோனா தொற்று- கேரள முதல்வர் பினராயி விஜயன்
x
தினத்தந்தி 8 May 2020 10:02 PM IST (Updated: 8 May 2020 10:02 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கேரளா வந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம், 

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “  சென்னையில் இருந்து எர்ணாகுளம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  கேரளாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16 ஆக  உயர்ந்துள்ளது. 

 19810 - பேர் வீட்டுக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 347 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 33,586 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 35,355 பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளன” என்றார்.


Next Story