தேசிய செய்திகள்

கைதிகள், சிறை காவலர்கள் என மும்பை ஜெயிலில் 103 பேருக்கு கொரோனா + "||" + Corona infection for 103 in Mumbai jails as inmates and prison guards

கைதிகள், சிறை காவலர்கள் என மும்பை ஜெயிலில் 103 பேருக்கு கொரோனா

கைதிகள், சிறை காவலர்கள் என மும்பை ஜெயிலில் 103 பேருக்கு கொரோனா
மும்பை ஜெயிலில் கைதிகள், சிறை காவலர்கள் என 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் ஜெயில்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை சுமார் 5 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் புதிதாக யாரையும் சிறைக்குள் அனுமதிக்கவோ அல்லது காவலர்கள் உள்பட சிறைச்சாலை ஊழியர்கள் வெளியே செல்லவோ தடை விதிக்கப்பட்டது.

இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி மும்பை ஆர்தர்ரோடு சிறையில் சமையல்காரர் ஒருவர் மூலம் 72 கைதிகளுக்கு நோய்தொற்று பரவியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மேலும் 5 கைதிகள் மற்றும் 26 சிறை காவலர்கள் என புதிதாக 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் சிறைகாவலர்கள் 103 பேரும் மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.