சத்தீஸ்காரில் துப்பாக்கி சூடு:; 4 மாவோயிஸ்டுகள் கொலை; ஒரு போலீஸ் அதிகாரி பலி


சத்தீஸ்காரில் துப்பாக்கி சூடு:; 4 மாவோயிஸ்டுகள் கொலை; ஒரு போலீஸ் அதிகாரி பலி
x

சத்தீஸ்காரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி பலியானார்

புதுடெல்லி

சத்தீஸ்கார் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்தோனி கிராமத்திற்கு அருகே போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை  நடைபெற்றது 

துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி  ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது

நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள், ஒரு ஏ.கே .47  ரக துப்பாக்கி, 1 எஸ்.எல்.ஆர் ஆயுதம் மற்றும் இரண்டு 315 துளை துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன" என்று ராஜ்நந்த்கான் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜி.என்.பாகெல் கூறி உள்ளார்.

கடந்த ஜூலை 12, 2009 அன்று இதே பகுதியில் நடந்த மோதலில் போலீஸ் சூப்பிரண்டு வி.கே.சவுபே உட்பட 29   போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

Next Story