தேசிய செய்திகள்

கிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி + "||" + Karnataka government permits pubs, clubs and bars to sell liquor till May 17

கிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி

கிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி
கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ந்தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.
பெங்களூரு

கொரோனா தொற்று ஊரடங்கால்  40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும்  சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவை விஞ்சி அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மதுபானக் கடையில் காணப்படும் கூட்டம்தான். கூட்டம் என்றால் வெறும் கூட்டமல்ல.. கட்டுக்கடங்காத கூட்டம்

இது குறித்து சுப்ரீம்  கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஆன் லைன் மற்றும் மறைமுக மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானங்களை வழங்க அனுமதித்துள்ளன.

இந்த நிலையில்  கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ந்தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.

கலால் துறையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் கிளப்புகளின் உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து. ஒரு வாரத்திற்கு பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை (ஐ.எம்.எல்) விற்க அனுமதிக்கிறது. காலை 9 மணி மற்றும் இரவு 7 மணி மதுபானம் விற்பனை செய்யப்படும் எனகூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
4. பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
5. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.