சர்வதேச அன்னையர் தினம்: கொரோனாவை எதிர்த்து போராடும் அம்மாக்கள்
சர்வதேச அன்னையரின் பெருமையை உணர்த்திய ஆபத்துக்காலத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும் அம்மாக்கள்...
சென்னை,
இன்று சர்வதேச அன்னையர் தினம். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அன்னையர் தினத்தின் முக்கியத்துவத்தை முன் வைக்கிறது.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அன்னையர் தினம் தாய்மையின் பரிவையும் துணிவையும் நமக்கெல்லாம் அதிகம் புரிய வைத்திருக்கிறது எனலாம். அதற்கு காரணம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தாய்மை உணர்ச்சியோடு போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள்.
பிரீத் (மருத்துவர்களின் காட்சிகள் - அம்மா செண்டிமெண்ட் இசை)
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்களும் ஒரு தாய்தானே என்பதை நமக்கெல்லாம் புரிய வைத்த சீன தேசத்து காட்சி இது. தன் பிள்ளையை தொடக் கூட முடியாமல் தூரத்தில் இருந்து செய்கையால் கொஞ்சி நம்மை எல்லாம் உருக வைத்த தாய் இவர்.
நம் பக்கத்து மாநிலத்தில் கூட இதே காட்சி காணக் கிடைத்தது. மருத்துவரான அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து வந்த இந்தக் குழந்தை தன் தாயை தூரத்தில் இருந்து பார்த்து அழுதாள்... அம்மாவையும் அழ வைத்தாள்.
சண்டிகரில் 15 மாதமே ஆன இந்தக் குழந்தைக்கு கொரோனா தொற்று... வீடியோ கால் மூலம் இது தன் அம்மாவுக்கு கொடுத்த முத்தம் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் நெகிழ வைத்தது.
உலகில் உள்ள ஒவ்வொரு பெண் மருத்துவரும் தங்கள் சொந்தக் குழந்தையைப் பிரிந்துதான் கொரோனா வைரஸ் பணிக்கு வருகிறார்கள். அதனால்தான் பெங்களூருவில் பணி முடிந்து திரும்பி வந்த ஒரு பெண் மருத்துவருக்கு அப்பார்ட்மெண்ட் வாசிகள் இப்படியொரு மரியாதை கொடுத்திருக்கிறார்கள்.
தாயாகவும் மருத்துவராகவும் சேவை செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற மரியாதை தரப்பட வேண்டும் என்பதே கொரோனா வைரஸ் நமக்கு கொடுத்திருக்கும் பாடம்.
Related Tags :
Next Story