எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு


எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
x
தினத்தந்தி 10 May 2020 3:05 PM IST (Updated: 10 May 2020 6:11 PM IST)
t-max-icont-min-icon

இந்திய சீன எல்லையான சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சிக்கிம்,

பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. 

சீன ராணுவம் அவ்வபோது இந்திய நிலைகளுக்கு ஊடுருவவதும், இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் முன்னதாக நிகழ்ந்து உள்ளது. இந்தநிலையில் 

"இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய-சீனா எல்லையான சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்கு எல்லையில் இருக்கும் நகு லா செக்டார் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் எல்லைப்பகுதியில் காவலில் இருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் இருநாட்டு வீரர்களும் லேசான காயமடைந்துள்ளனர்.  இந்த மோதலில் 4 இந்திய வீரர்களுக்கும், 7 சீன வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்ட போது சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்திய சீன எல்லையான சிக்கிம் பகுதியில் எல்லைப் பிரச்சினை நிலவுவதால் இது போன்ற மோதல்கள் அடிக்கடி நடக்கும் என்றும், 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் லடாக்கில் பாங்காங் ஏரிப்பகுதியில்  இருநாட்டு வீரர்களும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர் எனவும், அதன்பின் சிக்கிம்மின் டோக்லாம் பகுதியிலும் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story