கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி: டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், முறைசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 48-நாட்கள் ஆகியுள்ளன.
இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.இந்த நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
கட்டுமானத்தொழிலாளர்களின் நல வாரிய உறுப்பினர்கள், டெல்லி தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராயை இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு, கட்டுமானத்தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில், பதிவு செய்யப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்கள் எண்ணிக்கை 46 ஆயிரமாக உள்ளது. கட்டுமானத்தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து உதவி தொகை கோருவதற்காக பிரத்யேக இணையதள பக்கம் வெளியிடவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story