கேரளாவில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 489 ஆக உள்ளது.
இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் காசர்கோடு பகுதியும், வயநாடு, மலப்புரம் மற்றும் பாலக்காட்டில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 34 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக உள்ளன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 27,956 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தகவல்களை கேரள சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா தெரிவித்தார்.
Related Tags :
Next Story