கொரோனா மரணங்களை வகைப்படுத்தும் விதிமுறை - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது
கொரோனா மரணங்கள் என்று வகைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புதுடெல்லி,
கொரோனா புதிய நோய் என்பதால், அதன் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட விரிவான தகவல் தொகுப்பு உருவாக்குவது அவசியம்.
எனவே, உயிரிழப்புகளை கொரோனா மரணம் என்று வகைப்படுத்த இந்த விதிமுறை வெளியிடப்படுகிறது. நிமோனியா, இதயத்தில் பிரச்சினை, ரத்தக்குழாயில் அடைப்பு போன்றவற்றால் உயிரிழப்பவர்களை கொரோனா மரணமாக பதிவு செய்யலாம்.
பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்குள் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால், அதை சந்தேகத்துக்குரிய கொரோனா மரணமாக பதிவு செய்யலாம். இறப்புக்கான காரணங்களை டாக்டர்கள் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story