கொரோனாவுக்கு எதிரான போர்: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு


கொரோனாவுக்கு எதிரான போர்: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு
x
தினத்தந்தி 12 May 2020 5:15 AM IST (Updated: 12 May 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் முன்வரிசையில் இருந்து பணியாற்றி வருவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 1998-ம் ஆண்டு மே 11-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு விஞ்ஞானமும், தொழில் நுட்பமும்தான் முக்கிய காரணிகள் என்பதை நாம் அறிவோம். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் முன்வரிசையில் இருந்து பணியாற்றி நாட்டை பெருமைப்படுத்தி உள்ளனர்.

இந்த நாளில், நாட்டை தற்சார்பானதாக ஆக்கியதில் விஞ்ஞான சமுதாயம் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பை நாம் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story