தினமும் 6 மணிநேரம் பணியாற்றும் 9 மாத கர்ப்பிணியான செவிலியர்


தினமும் 6 மணிநேரம் பணியாற்றும் 9 மாத கர்ப்பிணியான செவிலியர்
x
தினத்தந்தி 12 May 2020 9:20 AM IST (Updated: 12 May 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் 9 மாத கர்ப்பிணியான செவிலியர் ஒருவர் அரசு மருத்துவமனையில் தினமும் 6 மணிநேரம் பணியாற்றி வருகிறார்.

சிவமொக்கா,

நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் 862 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 426 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.  31 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் கஜனூரு கிராமத்தில் வசித்து வருபவர் ரூபா பிரவீன் ராவ்.  9 மாத கர்ப்பிணியான இவர் ஜெய சாமராஜேந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

தினமும் தனது கிராமத்தில் இருந்து தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இதுபற்றி ரூபா கூறும்பொழுது, இந்த பகுதியை சுற்று பல கிராமங்கள் உள்ளன.  அந்த பகுதி மக்களுக்கு எங்களுடைய சேவை தேவையாக உள்ளது.

எனது மூத்த பணியாளர்கள் விடுமுறை எடுத்து கொள்ளும்படி என்னிடம் கேட்டு கொண்டனர்.  ஆனால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்.  ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பணியாற்றி வருகிறேன்.

முதல் மந்திரி எடியூரப்பா தொலைபேசி வழியே என்னிடம் தொடர்பு கொண்டு  பேசினார்.  எனது அர்ப்பணிப்பு உணர்வை அவர் பாராட்டினார்.  ஓய்வு எடுத்து கொள்ளும்படி எனக்கு அவர் ஆலோசனையும் வழங்கினார் என்று கூறியுள்ளார்.

Next Story