இன்று முதல் 15 சிறப்பு ரெயில்கள்: முன்பதிவு 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன


இன்று முதல் 15 சிறப்பு ரெயில்கள்: முன்பதிவு 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன
x
தினத்தந்தி 12 May 2020 11:36 AM IST (Updated: 12 May 2020 11:36 AM IST)
t-max-icont-min-icon

15 சிறப்பு ரெயில்கள் முன்பதிவு 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன. மொத்தம் 54 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்

புதுடெல்லி

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கால்  நிறுத்தப்பட்ட ரெயில் சேவை ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தொடங்குகிறது

ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட உள்ளன.  

இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவர், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.

இந்த சிறப்பு ரெயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை டெல்லிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

15 பயணிகள் ரெயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் தொடங்கியது, திட்டமிடப்பட்ட தொடக்க நேரத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக. 54,000 க்கும் மேற்பட்ட பயணிகள்   முன்பதிவு செய்து உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹவ்ரா-புதுடெல்லி ரெயிலுக்கான முதல் வகுப்பு ஏசி, மூன்று அடுக்கு ஏசி டிக்கெட்டுகள் முதல் 10 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்தன, மேலும் அனைத்து டிக்கெட்டுகளும் 20 நிமிடங்களில் தீர்ந்தன.

புவனேஸ்வர்-புதுடெல்லி சிறப்பு ரெயில்களுக்கான அனைத்து முதல் வகுப்பு ஏசி மற்றும் மூன்று அடுக்கு ஏசி  டிக்கெட்டுகளும் மாலை 6.30 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்டன.


எண்

ரெயில்
எண்

புறப்படும் இடம்

நேரம்

சேரும் இடம்

நேரம்

நாள்

1

2301

ஹவ்ரா

1705

புதுடெல்லி

1000

தினமும்

2

2302

புதுடெல்லி

1655

ஹவ்ரா

955

தினமும்

3

2951

மத்திய மும்பை

1730

புதுடெல்லி

905

தினமும்

4

2952

புதுடெல்லி

1655

மத்தியமும்பை

845

தினமும்

5

2957

அகமதாபாத்

1820

புதுடெல்லி

800

தினமும்

6

2958

புதுடெல்லி

2025

அகமதாபாத்

1005

தினமும்

7

2309

ராஜேந்தர் நகர்
(பாட்னா)

1920

புதுடெல்லி

740

தினமும்

8

2310

புதுடெல்லி

1715

ராஜேந்தர்நகர்
(பாட்னா)

530

தினமும்

9

2691

பெங்களூரு

2030

புதுடெல்லி

555

தினமும்

10

2692

புதுடெல்லி

2115

பெங்களூரு

640

தினமும்

11

2424

புதுடெல்லி

1645

தப்ருகார்

700

தினமும்

12

2423

தப்ருகார்

2110

புதுடெல்லி

1015

தினமும்

13

2442

புதுடெல்லி

1600

பிலாசப்பூர்

1200

வாரம்

14

2441

பிலாசப்பூர்

1440

புதுடெல்லி

1055

வாரம்

15

2823

புவனேஸ்வர்

1000

புதுடெல்லி

1045

தினமும்

16

2824

புதுடெல்லி

1705

புவனேஸ்வர்

1725

தினமும்

17

2425

புதுடெல்லி

2110

ஜம்முதாவி

545

18

2426

ஜம்முதாவி

2010

புதுடெல்லி

500

தினமும்

19

2434

புதுடெல்லி

1600

சென்னைசென்ட்ரல்

2040

புதன்
வெள்ளி

20

2433

சென்னைசென்ட்ரல்

635

புதுடெல்லி

1030

வெள்ளி
ஞாயிறு

21

2454

புதுடெல்லி

1530

ராஞ்சி

1000

புதன்
சனி

22

2453

ராஞ்சி

1740

புதுடெல்லி

1055

செவ்வாய்
ஞாயிறு

23

2414

புதுடெல்லி

1125

மட்கோன்

1250

வெள்ளி
சனி

24

2413

மட்கோன்

1030

புதுடெல்லி

1240

ஞாயிறு
திங்கள்

25

2438

புதுடெல்லி

1600

செகந்திராபாத்

1400

ஞாயிறு

26

2437

செகந்திராபாத்

1315

புதுடெல்லி

1040

புதன்

27

2432

புதுடெல்லி

1125

திருவனந்தபுரம்

525

செவ்வாய்
புதன்
ஞாயிறு

28

2431

திருவனந்தபுரம்

1945

புதுடெல்லி

1240

செவ்வாய்
வியாழன்
வெள்ளி

29

2501

அகர்தலா

1900

புதுடெல்லி

1120

திங்கள்

30

2502

புதுடெல்லி

1950

அகர்தலா

1330

புதன்


Next Story