ரூ.500 க்கு கொரோனா பரிசோதனை புதிய சோதனை கருவி தயார்
500 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை செய்ய புதிய சோதனை கருவி உருவாக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா
கொரோனா பரிசோதனைக்கு 500 ரூபாய் மட்டுமே செலவாகும் வகையிலான கருவியை உருவாக்கியுள்ளதாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜி.சி.சி பயோடெக் இந்தியா என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாத கால ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்குப் பிறகு இந்த கிட்டை தயாரித்துள்ளதாக பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இதற்கான உதிரிபாகங்கள் அனைத்தும் தங்களின் தயாரிப்பு என்பதால், இந்த கிட்டை தயாரிக்க ஆகும் செலவு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கியுள்ளதாகவும் 40 லட்சம் இருப்பில் உள்ளதாகவும் மஜும்தார் கூறினார்.
இந்த கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டால் 90 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும்.
Related Tags :
Next Story