இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா


இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 May 2020 6:08 PM IST (Updated: 12 May 2020 6:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி: 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 70756 ஆக உயர்ந்து உள்ளது, 2,293 இறப்புகள் பதிவாகி உள்ளன. 

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படையின் செய்தியறிக்கையை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இந்த 9 பேரில் 6 படையினர் டெல்லியில் உள்ளார்கள். ஒருவர் கொல்கத்தாவிலும், இருவர் திரிபுராவிலும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



Next Story