கொரோனா சமூக பரவலாகி விட்டதா? நாடு முழுவதும் சென்னை உள்பட 69 மாவட்டங்களில் ஆய்வு
நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70756 ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பரவல் வேகமெடுத்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் மூன்றாம் நிலையான சமூக பரவல் நிலையை கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதா? என ஆய்வு செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்கிறது. மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story