கொரோனா நோய்த்தொற்று இருப்பதை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணக்கெடுப்பு


கொரோனா நோய்த்தொற்று இருப்பதை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 13 May 2020 11:22 AM IST (Updated: 13 May 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துகிறது.

புதுடெல்லி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்காக மக்கள் தொகை அடிப்படையிலான செரோ கணக்கெடுப்பை நடத்தி வருவதாக மருத்துவ அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐ.சி.எம்.ஆர், புதுடெல்லி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய அரசு மற்றும் நோய்களுக்கான தேசிய மையம்,மாநில சுகாதாரத் துறைகள், உல சுகாதார அமிப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்தியா ஒரு சமூக அடிப்படையிலான செரோ-கணக்கெடுப்பை நடத்துகிறது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்படும் என்று சுகாதார ஆராய்ச்சி அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்.ஐ.இ) மற்றும் சென்னையின் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஆர்.டி) ஆகியவை இந்த ஆய்வை ஒருங்கிணைக்கின்றன.

Next Story