உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின்நோக்கம் - நிர்மலா சீதாராமன்
உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் 5 தூண்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்; ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். சிறப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசு ஆலோசனை நடத்தியது; தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்படுகிறது.
தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்; மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது
சுயசார்பு பாரதம்" என்ற தலைப்பில் தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.உள்ளூர் சந்தைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களே பின்னாளில் பெருநிறுவனங்களாக மாறியதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பிபிஇ கிட்டுகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது.
உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம். ஜன்தன், ஆதார் மூலம், பயனாளிகளுக்கு நிவாரணம் நேரிடையாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், மின்மிகை நாடாக இந்தியா மாறும் நிலை உருவாகியுள்ளது. தற்சார்பு நாடாக இந்தியாவை மாற்றுவதே, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாகும்.சுயசார்பு பாரதம்" என்பது உலக நாடுகளில் இருந்து, இந்தியா தனிமைப்படுத்திக் கொள்வதாக கருதக் கூடாது என கூறினார்.
Related Tags :
Next Story