சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமின்றி கடன் - நிர்மலா சீதாராமன்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கப்படும், இதற்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்.
அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்.வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்.
ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும். சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.
குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிதிக்குள், நிதி திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கப்படும், 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும்.இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும்
ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணைக்கடன் வழங்கப்படும்.
சிறு-குறு, நடுத்தர நிறுனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். ரூ.100 கோடி வரை விற்று-முதல் காணும் நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தால் பயன்பெறும் என கூறினார்.
Related Tags :
Next Story