காஷ்மீர் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற டிரைவர் சுட்டுக்கொலை - துணை ராணுவம் நடவடிக்கை


காஷ்மீர் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற டிரைவர் சுட்டுக்கொலை - துணை ராணுவம் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 May 2020 2:15 AM IST (Updated: 14 May 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற டிரைவர் துணை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

ஊரடங்குக்கு மத்தியில் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், அங்கு ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, துணை ராணுவ படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அங்குள்ள புட்காம் மாவட்டத்தில் மாகமின் போலீஸ் நிலைய எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அங்கு அந்த வாகனத்தை சி.ஆர்.பி.எப். வீரர்கள் மறித்தனர். அப்போது டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதனால் அந்த வாகனத்தை நோக்கி வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டிரைவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியான டிரைவர் அங்குள்ள மஹானா பீர்வாவில் வசித்த மெஹ்ராஜுதீன் என்பது தெரியவந்துள்ளது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனத்தை மறித்தபோது எதற்காக நிறுத்தாமல் வேகமாக சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story