இந்தியாவில் கடந்த 24 மணி கொரோனாவால் 134 பேர் உயிரிழப்பு;மாநிலம் வாரியாக பாதிப்பு விவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி கொரோனா தொற்றால் 134 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2549ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 235ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 780003ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2549 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 49 ஆயிரத்து 219 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 922ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 975 ஆக உயர்ந்துள்ளது.
2 ஆம் இடத்தில் உள்ள குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆகவும், பலி எண்ணிக்கை 64 ஆகவும் உயர்ந்துள்ளது. 4 ஆம் இடத்தை வகிக்கும் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 998 ஆகவும், பலி எண்ணிக்கை 106 ஆகவும் உள்ளது.
5 ஆம் இடத்தை வகிக்கும் ராஜஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 328 ஆகவும், பலி எண்ணிக்கை 121ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 26 ஆயிரத்து 235 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 5547 பேர் குணமாகியிருப்பதாக மத்திய சுகாதார துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மாநிலங்கள் | மொத்த பாதிப்பு | குணமானவர்கள் | இறப்பு |
அந்தமான் நிகோபார் | 33 | 33 | 0 |
ஆந்திரா | 2137 | 1142 | 47 |
அருணாசலபிரதேசம் | 1 | 1 | 0 |
அசாம் | 80 | 39 | 2 |
பீகார் | 940 | 388 | 7 |
சண்டிகார் | 187 | 28 | 3 |
சத்தீஸ்கார் | 59 | 55 | 0 |
தாதர் நகர் காவேலி | 1 | 0 | 0 |
டெல்லி | 7998 | 2858 | 106 |
கோவா | 7 | 7 | 0 |
குஜராத் | 9267 | 3562 | 566 |
அரியானா | 793 | 418 | 11 |
இமாசலபிரதேசம் | 66 | 39 | 2 |
ஜம்மு&காஷ்மீர் | 971 | 466 | 11 |
ஜார்கண்ட் | 173 | 79 | 3 |
கர்நாடகா | 959 | 451 | 33 |
கேரளா | 534 | 490 | 4 |
லடாக் | 43 | 22 | 0 |
மத்தியபிரதேசம் | 4173 | 2004 | 232 |
மராட்டியம் | 25922 | 5547 | 975 |
மணிப்பூர் | 2 | 2 | 0 |
மேகலயா | 13 | 10 | 1 |
மிசோரம் | 1 | 1 | 0 |
ஒடிசா | 538 | 143 | 3 |
புதுச்சேரி | 13 | 9 | 1 |
பஞ்சாப் | 1924 | 200 | 32 |
ராஜஸ்தான் | 4328 | 2459 | 121 |
தமிழ்நாடு | 9227 | 2176 | 64 |
தெலுங்கானா | 1367 | 940 | 34 |
திரிபுரா | 155 | 16 | 0 |
உத்தரகாண்ட் | 72 | 46 | 1 |
உத்தரபிரதேசம் | 3729 | 1902 | 83 |
மேற்குவங்காளம் | 2290 | 702 | 207 |
மொத்தம் | 78003 | 26235 | 2549 |
Related Tags :
Next Story