வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்கள் வாங்க அனுமதி -நிர்மாலா சீதாராமன்
வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மாலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும்; 23 மாநிலங்களுக்கு உட்பட்ட 67 கோடி பேர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பயனடைவர்.வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த 2 மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182ல் இருந்து இந்த ஆண்டு ரூ.202ஆக உயர்வு. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும்.
ஊரக வேலைத்திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்வு; ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story