தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்- நிர்மலா சீதாராமன்
ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
- ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
- ,23 மாநிலங்களில் உள்ள 67 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள்.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வகை செய்யப்படும்.
- மார்ச் 2021 உள்ளாக இவற்றை நடைமுறைப்படுத்தி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த விலை குடியிருப்பு வசதி.
- தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
- *பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.
- தனியார் கட்டிடங்களையும் இதன் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
- தொழில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை உருவாக்கலாம் அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- சரியாக கடனை கட்டக்கூடிய சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
- 50,000 ரூபாய்க்கு குறைவான முத்ரா கடன்களுக்கான வட்டி 2% குறைப்பு,
- இதற்காக 1500 கோடி ரூபாய் வட்டி மானியமாக வழங்கப்பட உள்ளன.
- முத்ரா வட்டி மானியம் காரணமாக மூன்று கோடி சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள்
- சாலையோர வியாபாரிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுகிறார் நிதியமைச்சர்
- 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தியாவில் உள்ளனர் .
- ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதி உதவி ஒருவருக்கு 10,000 ரூபாய் வரை கடன் வசதி.
- சாலையோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.
Related Tags :
Next Story