இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 15 நாட்களில் இரட்டிப்படைந்த பலி எண்ணிக்கை


இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 15 நாட்களில் இரட்டிப்படைந்த பலி எண்ணிக்கை
x
தினத்தந்தி 15 May 2020 9:52 AM IST (Updated: 15 May 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரசுக்கு பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 134 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,415ல் இருந்து 2,549 ஆக நேற்று உயர்வடைந்தது.  26 ஆயிரத்து 234 பேர் குணமடைந்தும், 49 ஆயிரத்து 219 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 281ல் இருந்து 78 ஆயிரத்து 3 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் இன்று பலியாகி உள்ளனர்.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 100 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,549ல் இருந்து 2,649 ஆக உயர்வடைந்துள்ளது.  27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்தும், 51 ஆயிரத்து 401 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 3ல் இருந்து 81 ஆயிரத்து 970 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது.  இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது.  இந்நிலையில், கடந்த 15 நாட்களில் இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது.

Next Story