ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்


ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
x
தினத்தந்தி 15 May 2020 12:59 PM IST (Updated: 15 May 2020 12:59 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

புதுடெல்லி 

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தகி வாதிட்டார். ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

“ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை ஏற்பாடு உள்ளது. ஆனால்,  ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை.

தமிழகம், டெல்லி போன்ற சிறிய மாநிலம் இல்லை. ஒருவர் மது பாட்டில்களை எடுத்துச் செல்கிறார் என்றால், அதில் பல ஆபத்துக்கள் உள்ளன.

ஆன்லைனில் விற்பனை செய்தால் கலப்பட மது விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் மது கடத்தல் அதிகரிக்கும். மேலும் டாஸ்மாக் திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு.மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்” என்றார்.

ஐகோர்ட் விசாரணையின் போது தமிழக அரசு விரிவான பதிலளிக்க அவகாசம் கோரிவிட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் கடைகளை திறக்க வேண்டும் என கோருவது வரம்பு மீறல் என்று எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது.

Next Story