கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 5 ஆம் தேதி தாமதமாக தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்படும். இந்த அறிகுறிகள் கொண்டு தான் கேரளாவில் பருவமழை தொடங்கும். வழக்கமாக இந்த அறிகுறி மே மாதம் 20 ஆம் தேதிக்கு மேல் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு முன்பே அந்தமான், நிகோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால், கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி பருவ மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் கேரளாவில் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 5 ஆம் தேதி தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Forecast for the 2020 SW Monsoon Onset over Kerala
— RWFC New Delhi (@RWFC_ND) May 15, 2020
This year, the onset of s-west monsoon over Kerala is likely to be slightly delayed as compared to normal date of onset of 1st June. Its onset over Kerala this year is likely to be on 5th June with a model error of ± 4 days. pic.twitter.com/TRX1miwkUA
Related Tags :
Next Story