ஊரடங்கால் இந்தியாவில் 80 சதவீத குடும்பங்கள் வருமானத்தை இழந்து உள்ளன
ஊரடங்கால் இந்தியாவில் 80 சதவீத குடும்பங்கள் வருமானத்தை இழந்து உள்ளன என ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளன.
புதுடெல்லி
இந்திய குடும்பங்களில் சுமார் 84 சதவீதம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் கணிசமான வருமானத்தை இழந்து உள்ளனர்.மேலும் பலர் உதவி இல்லாமல் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.
சிகாகோ ருஸ்டாண்டி மையம் ஏப்ரல் மாதத்தில் 27 இந்திய மாநிலங்களில் சுமார் 5,800 வீடுகளை உள்ளடக்கிய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்தது. அதில் கிராமப்புறங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வுகள் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மற்றும் பிறவற்றின் முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போகின்றன, இது மார்ச் 2.5 லட்சம் முதல் 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
130 மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் திரிபுரா, சத்தீஸ்கார், பீகார், ஜார்கண்ட் மற்றும் அரியானா. மாநில மக்கள் ஊரடங்கால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
சுமார் 34 சதவீதம் பேர் கூடுதல் உதவி இல்லாமல் ஒரு வாரத்திற்கு மேல் உயிர்வாழமுடியாது என்று தெரிவித்து உள்ளனர்.
அதிக வருமானம் ஈட்டியவர்கள் மிகக் குறைந்த சரிவைக் கண்டனர், ஏனெனில் அவர்கள் நிலையான, சம்பள வேலைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் திறன் மற்றும் தொடர்ந்து வருமானம் ஈட்டக்கூடிய திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். மிகக்குறைந்த வருமானம் ஈட்டக்கூடியவர்கள் ஊரடங்கின் போதும் விவசாயம் அல்லது உணவு விற்பனையாளர்கள் போன்ற போதிலும் தொடர்ந்த தொழில்களைக் கொண்டிருக்கலாம் -
மீதமுள்ள குடும்பங்கள் கணிசமான வேலை இழப்புகளுக்கு ஆளாகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story