நிலக்கரித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டம்- நிதி அமைச்சர் அறிவிப்பு
நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதி மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- சுயசார்பு பாரதத்தை உருவாக்க பல போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். சுயசார்பு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ஜி.எஸ்.டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வந்திருக்கிறார். நாட்டில் தொழில் துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை. கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வருகிறார்.
ஜி.எஸ்.டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. நிலக்கரித்துறைறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டம். நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வணிக ரீதியிலாக நிலக்கரி எடுப்பதற்கு முதல்கட்டமாக 50 சுரங்கங்கள் வழங்கப்பட உள்ளன. ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. 500 கனிமச்சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். நிலக்கரி படுகை மீத்தேன் ஏலம் விடப்படும்” என்றார்.
Related Tags :
Next Story