போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது- நிர்மலா சீதாராமன்
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது; பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டம் குறித்து 4வது நாளாக விளக்கம் அளித்தார். அப்போது
அப்போது அவர் கூறியதாவது:
இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர 3 ஆண்டுகளுக்கு முன்பே மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகிறது.
நேரடி பணமாக மானியம் வழங்கப்பட்டது மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது. எளிதில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களுக்கு இன்றைய அறிவிப்புகளில் முக்கியத்துவம்.
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது; பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது.
இந்திய உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புகளும் அதிக உள்ளன.உலக அளவில் கடினமான போட்டிகளை எதிர்கொள்ள இந்திய தொழில்துறை தயாராக வேண்டியது முக்கியம்.
முதலீடுகளுக்கான அனுமதியை அதிவிரைவாக வழங்க அரசு செயலர்கள் மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்படும் ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும்.
திட்டஙளை அடையாளம் கண்டு முதலீட்டாளர்கள், மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைக்கும் பணியில் திட்ட மேம்பாட்டு பரிவு ஈடுபடும். முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும் என கூறினார்
Related Tags :
Next Story