புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி!

டெல்லியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 53-நாட்கள் ஆகியுள்ளது. ஊரடங்கால் வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கால்நடையாக நடந்து செல்வதை கடந்த சில வாரங்களாகவே காண முடிகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு சிறப்பு ரெயில்களை மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், பல தொழிலாளர்கள் இன்னும் நடந்து செல்வதாக செய்திகள் வெளி வருகின்றன. சிலர் சரக்கு வாகனங்களிலும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் சொந்த ஊருக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார். டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். வெள்ளை நிற குர்தா, கருப்புநிற பேண்ட் அணிந்திருந்த ராகுல் காந்தி, நடைபாதையில் அமர்ந்து கொண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடினார்.
Related Tags :
Next Story