நாகாலாந்தை சேர்ந்த ராணுவ வீரர் கொரோனாவுக்கு பலி


நாகாலாந்தை சேர்ந்த ராணுவ வீரர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 17 May 2020 3:00 AM IST (Updated: 17 May 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

நாகாலாந்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

புதுடெல்லி, 

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அசாமில் பணியாற்றி வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும், உடல் அடக்கம் டெல்லியில் அவருடைய மனைவி கண் முன்பு ராணுவ மரியாதையுடன் நடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story