ஜார்க்கண்டில் போலீசார் என்கவுண்ட்டரில் நக்சலைட்டு சுட்டு கொலை


ஜார்க்கண்டில் போலீசார் என்கவுண்ட்டரில் நக்சலைட்டு சுட்டு கொலை
x
தினத்தந்தி 17 May 2020 11:15 AM IST (Updated: 17 May 2020 11:15 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்டில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.

ராஞ்சி,

ஜார்க்கண்டில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.  அங்கிருக்கும் பொதுமக்களை கடத்தி சென்று கொலை செய்வதுடன், ஊருக்குள் புகுந்து துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒழிக்க போலீசார் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜார்க்கண்டின் சிம்திகா மாவட்டத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், நக்சலைட்டு ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.  மற்றொருவர் படுகாயமடைந்து உள்ளார்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.  தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story