அரசின் நிதியுதவி சாதனைகளை பட்டியலிட்ட மத்திய நிதி மந்திரி
பொதுமக்களுக்கான அரசின் நிதியுதவி சாதனைகளை மத்திய நிதி மந்திரி பட்டியலிட்டார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி இன்று வெளியிட்டு வருகிறார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, நாம் மிக சிக்கலான ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும்.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாக பயன்பெற முடியும். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம். 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு மூலம் ரூ.10 கோடி அளவிற்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டுள்ளது
உஜ்வாலா திட்டத்தின் கீழ் விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 6.8 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.3 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க இந்த திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
Related Tags :
Next Story