கொரோனா எதிரொலி: அசாம், குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை
கொரோனா அச்சம் காரணமாக அசாம், குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தநிலையில் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், அசாம் மற்றும் குஜராத் மாநில அரசுகள் இன்று நூற்றுக்கணக்கான கைதிகளை விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாமில் 3500 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மாநிலத்தில் உள்ள 31 சிறைச்சாலைகளில் 8 ஆயிரம் என்ற அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் கைதிகள் உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி 3550 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை ஐ.ஜி தசரத் தாஸ் தெரிவித்தார்.
இதே போன்று குஜராத்தில் உள்ள 28 சிறைச்சாலைகளில் இருந்து சுமார் 2500 கைதிகள், பரோல், இடைக்கால ஜாமீன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story