வங்கக்கடலில் அம்பன் புயல் தீவிரமடைந்து சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது - வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடலில் அம்பன் புயல் தீவிரமடைந்து சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 18 May 2020 1:17 PM IST (Updated: 18 May 2020 1:17 PM IST)
t-max-icont-min-icon

அம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் அம்பன் புயல் தீவிரமடைந்து சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயலானது ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்றும், கடலில் சூறாவளிக் காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அம்பன் புயலால், சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் பெற்றுள்ள நிலையில்,  புயல் பாதிப்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் கடும் சவாலான பணியை ஏற்படுத்தியுள்ளது. 

புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலைகள் குறித்து  பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.  அம்பன் புயல் மே 20ம் தேதி மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story