டெல்லியில் ஒரே நாளில் 500- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 4,750- பேர் குணமடைந்துள்ள நிலையில், 166 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில், டெல்லி 4-ம் இடத்தில் உள்ளது. இந்தப்பட்டியலில் 35058 கொரோனா பாதிப்புடன் மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. 3-வது இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் 11,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story