பட்டபகலில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர்- மகன் சுட்டுக் கொலை
உத்தரபிரதேச உள்ளூர் சமாஜ்வாடி கட்சி அரசியல்வாதி மற்றும் அவரது மகன் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளிவந்துள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து 379 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 187 கி.மீ தொலைவில் உள்ளது சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாம்சோய் கிராமம் இங்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சாலைபோடப்பட்டு வந்தது.
அங்கு வயலை சாலை ஆகிரமிப்பதாக வயலின் உரிமையாளருக்கும் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சோட் லால் திவாகருக்கும் தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சோட் லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் கிராமத்தில் சாலையை ஆய்வு செய்யச் சென்றிருந்தனர். அங்கு திவாகரும் கிராமத்தைச் சேர்ந்த இரு நபர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த நபர்கள் சோட் லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனிலை தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவர் உள்ளூரில் பிரபலமானவர் அவர் சவீந்தர் என அடையாளம் காணப்பட்டார்.
திவாகரின் மனைவி சம்பலின் ஷாம்சோய் கிராமத்தின் தலைவராக உள்ளார். இரு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் துப்பாக்கிகள் வைத்திருந்த அந்த நபர்கள் தந்தை மற்றும் மகனை நோக்கி சுட்டனர். சோட் லால் திவாகரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் கூறுகிறார்கள். சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் பிரோஸ் கான், 2017 ல் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராக சோட் லால் திவாகர் இருந்தார் என்று கூறினார். இருப்பினும், கூட்டணி கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கொலைக்கு அப்பகுதியின் உள்ளூர் குண்டர்களையும் காரணம் என குற்றம்சாட்டினார்.
Related Tags :
Next Story