ஜூன் 1 முதல் பயணிகள் ரயில் இயக்கம் - பியுஷ் கோயல் அறிவிப்பு
ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தற்போது 4வது முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாள்தோறும், ஏ.சி. அல்லாத 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என்றும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும் என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். டிக்கெட் முன்பதிவு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story