ஜே.இ.இ. மெயின் தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்க புதிய வாய்ப்பு
ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வெளிநாடுகளுக்கு சென்று படிக்க இருந்த பல மாணவர்கள், கொரோனா பாதிப்பின் காரணமாக அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் இந்தியாவில் என்ஜினீயரிங் படிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் ஜே.ஜே.இ. மெயின் நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வுக்கான இணையதளத்தில் வருகிற 24-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வழங்கி இருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று தெரிவித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக படிக்க வெளிநாடு செல்ல இயலாத மாணவர்கள் தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, அவர்கள் ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.வேறு காரணங்களுக்காக தங்கள் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போன மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமையின் இயக்குனர் வினீத் ஜோஷி கூறி உள்ளார்.
ஜே.ஜே.இ. மெயின் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஜூலை 18-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story