இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  5,611 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2020 3:42 AM GMT (Updated: 20 May 2020 3:42 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 57-நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3303 ஆக உயர்ந்துள்ளது. 

ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 42,298- ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,611- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல்,  140  பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில்  37,136 பேரும்,  தமிழகத்தில் 12,448 -பேரும்,  குஜராத்தில் 12,140- பேரும் , டெல்லியில் 10,554-பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story