அம்பன் புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் சரக்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து


அம்பன் புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் சரக்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக  ரத்து
x
தினத்தந்தி 20 May 2020 11:31 AM IST (Updated: 20 May 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

அம்பன் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் சரக்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல் இன்று மாலை வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான இந்த புயல் வலுவிழந்து தற்போது கரையை கடக்க தயாராகி வருகிறது.  

மேற்கு வங்காளத்தின் டிகா  பகுதிக்கு தெற்கே 240 கி.மீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ள அம்பன் புயல், மணிக்கு சுமார் 27 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

170- முதல் 180 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  புயல் காரணமாக, கொல்கத்தா விமான நிலையம் நாளை காலை 5 மணி வரை மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்கு விமானங்கள், சிறப்பு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 


Next Story