ஒடிசாவில் 3 மணிநேரம் புயல் பாதிப்பு இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


ஒடிசாவில் 3 மணிநேரம் புயல் பாதிப்பு இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 20 May 2020 5:10 PM IST (Updated: 20 May 2020 5:10 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் 2 முதல் 3 மணிநேரம் வரை புயல் பாதிப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, இன்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடந்து வருகிறது.

இந்த ஆம்பன் புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா நேற்று கூறும்பொழுது, கடலில் புயலின் வேகம் மணிக்கு 200 முதல் 240 கி.மீட்டர் வரை உள்ளது.  வடக்கு, வடமேற்கு திசை நோக்கி சூறாவளி பயணிக்கிறது.  இந்த சூறாவளியால் மேற்கு வங்காளத்தில், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட கூடும்.

கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும்.  இது மணிக்கு 135 கி.மீட்டர் வரை வேகமெடுக்கும் என கூறினார்.

இந்நிலையில், புயலின் முன்பகுதியானது தரையில் தடம் பதித்து உள்ளது.  தொடர்ந்து முழுமையாக கரையை கடப்பதற்கு 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த புயலானது ஒடிசாவின் பத்ரக் மற்றும் பாலசோர் பகுதிகளில் தொடர்ந்து 2 முதல் 3 மணிநேரம் வரை பாதிப்பு ஏற்படுத்தும்.  இதன்பின்பு ஒடிசாவில் வேறு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

Next Story