ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்
கர்நாடகாவில் ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் சாலை போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் பெங்களூரு முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 56 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பயணிகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து எலகங்காவுக்கு நேற்று முன்தினம் ஒரு பி.எம்.டி.சி. பஸ் சென்றது.
அந்த பஸ்சில் அரசு உத்தரவை மீறி 70 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பி.எம்.டி.சி. நிர்வாகம், அரசு உத்தரவை மீறி ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக அந்த பஸ்சின் டிரைவர் தீபு வர்மா, கண்டக்டர் கொண்டய்யா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது

Related Tags :
Next Story