பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து சோனியா காந்தி மீது வழக்கு


பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து சோனியா காந்தி மீது வழக்கு
x
தினத்தந்தி 22 May 2020 2:02 AM IST (Updated: 22 May 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு எதிராக போராட அமைக்கப்பட்ட பிரதமர் கேர் நிதியகத்திற்கு வந்த நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு,

சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் கே.வி.பிரவீன்குமார் என்பவர் ஒரு புகாரை அளித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது டுவிட்டரில் கொரோனாவுக்கு எதிராக போராட அமைக்கப்பட்ட பிரதமர் கேர் நிதியகத்திற்கு வந்த நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும், இதுகுறித்து அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவலை வெளியிட்ட சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சாகர் போலீசார் சோனியா காந்தி மீது இந்திய தண்டனை சட்டம் 153, 505(1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த சட்ட பிரிவுகள், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தினருக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதை குறிப்பிடுகிறது.

சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

Next Story