பாகிஸ்தான் விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 பயணிகள் விமானம் 99 பயணிகளுடன் லாகூரில் இருந்து கராச்சி வந்தது. கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் எரிந்து சாம்பலானது . இதில் பயணம் செய்த 99 பயணிகள் 8 ஊழியர்கள இந்த விபத்தில் பலியானார்கள்.இதனை கராச்சி மேயர் உறுதி படுத்தி உள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the loss of life due to a plane crash in Pakistan. Our condolences to the families of the deceased, and wishing speedy recovery to those injured.
— Narendra Modi (@narendramodi) May 22, 2020
Related Tags :
Next Story