பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன்


பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன்
x
தினத்தந்தி 22 May 2020 11:02 PM IST (Updated: 22 May 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

பசிக்கொடுமையால் இறந்து கிடந்த நாயின் உடலை ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது, இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சம் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள்.

இந்தநிலையில் டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், சாலையில், ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் அருகே சென்ற பிரதுமன் சிங் நருகா “உங்களுக்கு சாப்பிட உணவு இல்லையா? நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? அவர் அந்த மனிதனைக் கூச்சலிட்டு, சாலையின் ஓரத்தில் காத்திருக்கச் சொல்கிறார். பின்னர் அவர் அவரை அணுகி அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குகிறார்.

இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து முகநூலில்  நருகா பதிவிட்டதாவது: பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருப்பதை சாலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது.  உடனடியாக நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள், இந்த வீடியோவை உங்களால் முடிந்தவரை அரசுக்கு சென்றடையும் வரை பகிர்ந்து கொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார்.

Next Story