இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று


இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று
x
தினத்தந்தி 23 May 2020 9:26 AM IST (Updated: 23 May 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654-பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  6,654‬  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினம் தினம் புதிய உச்சம் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை   51,784 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது. 


Next Story