கொரோனாவுக்கு எதிரான போர்: இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும்- பிரதமர் மோடி


கொரோனாவுக்கு எதிரான போர்: இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 May 2020 10:04 AM GMT (Updated: 23 May 2020 12:43 PM GMT)

கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி  இன்று இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடினார், தற்போது நடைபெற்று வரும் கொரோனா தொற்றுநோய் மற்றும் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து இருவரும் பேசினர்

இரு தலைவர்களும் இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.

கொரோனவின் விளைவுகளைத் தணிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் பிரதமர் இலங்கை அதிபருக்கு உறுதியளித்தார்.

இலங்கையில் இந்திய உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Next Story