பொருளாதாரத்தை எதிர்மறை பாதைக்கு கொண்டு சென்றதற்காக பாஜகவின் ஆா்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும்- ப.சிதம்பரம் தாக்கு


பொருளாதாரத்தை எதிர்மறை பாதைக்கு கொண்டு சென்றதற்காக பாஜகவின் ஆா்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும்- ப.சிதம்பரம் தாக்கு
x
தினத்தந்தி 23 May 2020 11:26 PM IST (Updated: 23 May 2020 11:26 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பொருளாதாரத்தை எதிர்மறை பாதைக்கு கொண்டு சென்ற்காக பாஜகவின் அமைப்பான ஆா்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தார்.

அதைத் தொடா்ந்து, ரெப்போ மற்றும் ரிவா்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைப்பதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அத்துடன் பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிப்பதாகவும் அவா் தெரிவித்தார்.

இந்தநிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பொருள்களுக்கான தேவை குறைந்ததால், விநியோகம் பாதிக்கப்பட்டு,  தற்போதைய நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி(ஜிடிபி) எதிர்மறை விகிதத்தில் சரிவை சந்திக்கும் என்று ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறி உள்ளார். அப்படியானால், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஏன் அவா் எடுக்க வேண்டும்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நேரடியாகவே அவா் மத்திய அரசிடம் கூற வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சக்திகாந்த தாஸ் எடுத்துக்கூறிய பிறகும் சிறப்பு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி பிரதமரும் மத்திய நிதி மந்திரியும் பெருமையுடன் கூறுவார்களா?

நாட்டின் பொருளாதாரத்தை  எதிர்மறை பாதைக்கு கொண்டு சென்றதற்காக பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆா்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும் என  அதில் பதிவிட்டுள்ளார்.

Next Story