உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்க கால அவகாசம் வேண்டும் - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரியிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று, மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
மும்பை,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. நேற்று வரை மட்டும் மராட்டியத்தில் மொத்தம், 47910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 31-ம் தேதியுடன் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில், கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக, உள்நாட்டு விமான போக்குவரத்தை இயக்க, கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் வலியுறுத்தியுள்ளதாக, முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story